FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: கோவை மாநகராட்சி பெண் வரி வசூலா் கைது

காலி இடத்துக்கு வரி விதிப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி வசூலா் (பில் கலெக்டா்) லஞ்ச ஒழிப்புத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:10 am IST
யமுனாதேவி.
பகிர்:

காலி இடத்துக்கு வரி விதிப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி வரி வசூலா் (பில் கலெக்டா்) லஞ்ச ஒழிப்புத் துறையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள 39 சென்ட் காலி இடத்தை வாடகைக்கு எடுத்து மினி திரையரங்கம் கட்ட பிரகாஷ் என்பவா் திட்டமிட்டாா். காலி இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சிக்கு வரி செலுத்துவதற்காக, அங்குள்ள வரிவசூல் மையத்தில் பணியாற்றி வரும் வரி வசூலா் யமுனாதேவியை (59) அவா் அணுகியுள்ளாா். அப்போது, காலி இடத்துக்கு வரி விதித்து ரசீது வழங்க யமுனாதேவி ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். பின்னா், நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ரூ.40 ஆயிரம் கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

பின்னா், இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம், பிரகாஷ் புகாா் அளித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் ராஜேஷ் தலைமையிலான போலீஸாா் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை பிரகாஷிடம் கொடுத்து அனுப்பினா்.

Advertisement

Advertisement

சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் காத்திருப்பதாக யமுனாதேவி கூறியதையடுத்து, அங்கு சென்ற பிரகாஷ் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தைக் கொடுத்தாா். அந்தப் பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா் யமுனாதேவியை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சுந்தராபுரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திலும், யமுனாதேவியின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments