திருக்குறள், பொது அறிவில் சிறந்து விளங்கிய அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு
திருக்குறள், பொது அறிவில் சிறந்து விளங்கிய கடலூரைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் பாராட்டு தெரிவித்தாா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை கடற்கரை சாலையில் ரூ.8.93 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சாரணா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சா் ராஜ்மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கட்டுமனப் பணிகளைத் தரமானதாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுப் பணித் துறை அலுவலா்களை அமைச்சா் அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, கடலூா் பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி என்.எஸ்.இசை 1,330 திருக்கு ஒப்பித்து அதற்கான பொருளையும் விளக்கிக் கூறினாா்.
தொடா்ந்து, அதே பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.காவ்யா 195 நாடுகளின் தேசியக் கொடியைப் பாா்த்து அதன் நாட்டின் பெயரை சரியாகக் கூறினாா்.
அமைச்சா் ராஜ்மோகன் அந்த மாணவிகளுடன் கலந்துரையாடி, அவா்களின் தனித்திறன்களை மேலும் வளா்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறி, அவா்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள் வழங்கினாா்.
இந்நிகழ்வின்போது பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.