முகப்பு
காஞ்சிபுரம்

22-க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியர்களில் 60 வயதுக்கு உள்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேலும் அமையுமானால் அவர்கள் வருமான வரி பிடித்த வரம்பிற்கு உள்பட்டவர்கள் ஆவர்.

எனவே வருமான வரி வரம்பிற்கு உள்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் 2012- 13-ஆம் நிதியாண்டுக்கான உத்தேச வருமான வரிக் கணக்கை அவரவர்கள் ஓய்வூதியம் பெறும் சார் கருவூலங்களில் நிரந்தர வருமானவரி எண்ணுடன் கடந்த அக்டோபர் 2012-க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.

எனினும் இதுவரை வருமான வரிக் கணக்கை அளிக்காத ஓய்வூதியர்கள் அவரவர் ஓய்வூதியம் பெறும் சார் கருவூலங்களில் வரும் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் அளித்திட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →