காஞ்சிபுரம்

காச நோய் வில்லைகள்: ஆட்சியர் வெளியிட்டார்

DIN

காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி 67-ஆவது காச நோய் வில்லைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:
இந்த ஆண்டு 40,800 காசநோய் வில்லைகள் ரூ.2,04,000 மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதன் மூலம் திரட்டப்படும் நிதி காச நோய் தடுப்புத் திட்டத்திற்கான ஆராய்ச்சி, மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதல் நிதி ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது.
எக்ஸ்ரே படச் சுருள் வாங்குவதற்கும் காசநோய் வில்லைகளின் விற்பனை தொகை பயன்படுத்தப் படுகிறது. இக்காசநோய் வில்லைகள் மருத்துவத்துறை மட்டும் அல்லாது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும் மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு 7,010 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே பொதுமக்கள் காசநோய் வில்லைகளை வாங்கி, காசநோயினை முற்றிலுமாக குணப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செளரிராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அருண்ராஜ், துணை இயக்குநர் (காச நோய் பிரிவு) மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT