காஞ்சிபுரம்

சிஐடியு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

DIN

மதுராந்தகம் கூட்டுறவு நுகர்பொருள் வாணிப கழகத்தில் சுமைப் பணித் தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் இருந்து மதுராந்தகம், செய்யூர் ஆகிய வட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணியில் பல வருடங்களாக சுமைப்பணி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான கூலி மிகவும் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி தரக் கோரி பலமுறை முறையிட்டும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்.
எனவே உரிய சட்டக்கூலியை வழங்க வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த மாதம் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்
கிழமை நடைபெற்றது. இப் போராட்டத்துக்கு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.மாசிலாமணி தலைமை வகித்தார். மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் சங்க கௌரவத் தலைவர் வழக்குரைஞர் கிருஷ்ணராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, நடராஜன், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT