காஞ்சிபுரம்

யோகாசன விழிப்புணர்வுப் பேரணி: 1,000 மாணவர்கள் பங்கேற்பு

DIN

பொன்னேரியில் தனியார் பள்ளி திங்கள்கிழமை நடத்திய யோகாசன விழிப்புணர்வுப் பேரணியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பொன்னேரியை அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 1,500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் யோகாசன விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இப்பள்ளி சார்பில் 3-ஆம் ஆண்டு யோகசன விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய யோகாசன விழிப்புணர்வுப் பேரணி, திருவேங்கடபுரம், வேண்பாக்கம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், தேரடி சாலை, ஹரிஹரன் கடை வீதி வழியாக 4 கி.மீ. தொலைவு சென்று, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அகத்தீஸ்வரர் கோயில் அருகே நிறைவடைந்தது.
பேரணியில் நான்கு வாகனங்களில் மாணவர்கள் கயிற்றில் தொங்கியவாறும், ஊஞ்சலில் அமர்ந்தும் யோகாசனம் செய்தனர்.
பேரணியில் யோகாசனம் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய தட்டிகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT