காஞ்சிபுரம்

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன் பேருந்துகள் நின்று செல்லுமா?

DIN

மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போன்ற அலுவலகங்கள் உள்ள பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போன்ற அரசு அலுவலகங்கள் உள்ளன.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் 58 ஊராட்சிகளும், கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 59 ஊராட்சிகளும் உள்ளன. இப்பகுதி மக்கள் பட்டா பெயர் மாற்றம், வருமானச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வருகின்றனர்.
மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 2-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனுக்களை அளிக்க வந்து செல்கின்றனர்.
அரசு, தனியார் பேருந்துகள் வட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் நிற்காமல் செல்கின்றன. இதனால் மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ஷேர் ஆட்டோவில் செலவழித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம் முன், அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT