காஞ்சிபுரம்

சுகாதாரத் துறை சார்பில் மழைக்கால மருத்துவ முகாம்

DIN

பொதுசுகாதாரத் துறை சார்பில், காட்டரம்பாக்கம், கீவளூர் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மழைக்கால மருத்துவ முகாம் நடைபெற்றது. 
மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவாமல் தடுக்க பொது
சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம பகுதிகளில் மழைக்கால மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டரம்பாக்கம், கீவளூர், பிச்சிவாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட திருமங்கையாழ்வார் தெரு ஆகிய பகுதிகளில்
திங்கள்கிழமை மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. காட்டரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், மதுரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் உமாமகேஸ்வரி, அப்பகுதி பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தார். இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டீபன், தரணி, கிராம சுகாதார செவிலியர் பானுமதி உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT