காஞ்சிபுரம்

காந்தி, காமராஜர் சிலைகளுக்கு காங்கிரஸார் மரியாதை

DIN

காஞ்சிபுரத்தில் காந்தி, சாஸ்திரி பிறந்த தினத்தை முன்னிட்டு சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் ஆகிய நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, அவர்களது உருவச்சிலை மற்றும் படங்களுக்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை, சர்தார் வல்லபாய் படேல் உருவப் படத்துக்கு நகரத் தலைவர் ஆர்.வி.குப்பன் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் லோகநாதன், நகரச் செயலாளர் டில்லிபாபு, இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில்...
ஸ்ரீபெரும்புதூரில் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் திங்கள்கிழமை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று காந்தி சாலையில் நூலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், நகர எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் வரதன், பொருளாளர் வாசு, துணைத் தலைவர் பக்கிரிசாமி, நிர்வாகிகள் புண்ணியநாதன், ராஜ்குமார் உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர். 
சாலவாக்கத்தில்...
உத்தரமேரூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை சாலவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். இடையம்புதூர் விநாயகம், அரும்புலியூர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் அகில இந்திய அன்னை இந்திரா பேரவையின் மாநிலத் தலைவர் உசேன் காந்தியடிகளின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT