காஞ்சிபுரம்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் உணவு விடுதியில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தப்படுத்தியபோது, விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மூன்று பேர் புதன்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் பகுதியில் தனியார் உணவு விடுதி உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டிகளை ஒப்பந்த அடிப்படையில் சுத்தப்படுத்தும் பணியில் சென்னை தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான பட்டாபிராம் நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த முருகேசன்(43), மாரிமுத்து(32), சிவா(40), சங்கீத ராஜ்(43), திருநாவுக்கரசு(40) ஆகியோர் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இதில் மாரிமுத்து மற்றும் முருகேசன் ஆகியோர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்து தொட்டிக்குள் விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கழிவுநீர் தொட்டியின் மேல் நின்று கொண்டிருந்த சக தொழிலாளர்களான சிவா, திருநாவுக்கரசு, சங்கீதராஜ் ஆகியோர் கூச்சலிட்டுள்ளனர்.
இவர்களது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த உணவு விடுதியில் பிளம்பராக பணியாற்றும் சோமங்கலம் மேலாத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி(34) கழிவுநீர் தொட்டிக்குள் குதித்து மாரிமுத்து மற்றும் முருகேசனை ஆகியோரை காப்பாற்ற முயன்றார். அப்போது விஷவாயு தாக்கி ரவியும் மயங்கி விழுந்தார். இதில் மாரிமுத்து, ரவி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு உணவு விடுதி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கழிவுநீர் தொட்டியில் இருந்து தொழிலாளர்கள் மூவரின் சடலங்களையும் மீட்டனர். அவற்றை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் புதிவு செய்து உணவுவிடுதியின் மேலாளர் பத்மகுமார், பொறியாளர் பெருமாள் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
சம்பவ இடத்தை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT