காஞ்சிபுரம்

இளைஞர் கொலை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை : செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

DIN

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பள்ளிக்கரணை காமாட்சி அம்மன் கோயில் முதல் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன்(62). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் தருண் (32). மினி டெம்போ வாகன ஓட்டுநராக இருந்தார். கடந்த 27.04.2012-இல் இரவு பணி முடித்து வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் டி.வி. சப்தம் அதிகமாக இருந்ததால் குறைத்து வைக்கும்படி மாரியப்பனிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு மாரியப்பன் கத்தியால் தருணை குத்திக் கொலை செய்தார். 
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தனர். இவ்வழக்கை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி செல்வகுமார், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மாரியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT