காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 7.94 லட்சம்

தினமணி

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 7.94 லட்சம் வசூலானது.
 ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ராமானுஜர் தானுகந்த திருமேனியாகக் காட்சியளிக்கிறார்.
 இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி தலைமையில், கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, மதச் சார்பு அறங்காவலர் மணவாள பாஷ்யம் ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
 உண்டியல் பணத்தை கணக்கீடு செய்யும் பணியில் ஆலய சமூக ஆர்வலர்கள் குழுவினர் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், ரூ. 7.94 லட்சம் ரொக்கம், 11 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT