காஞ்சிபுரம்

பேரூராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்கிளை சார்பாக, இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தமிழக அரசு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரியும், அண்மையில் உள்ளாட்சிப் பகுதி வீட்டு வரியை இருமடங்காக அரசு உயர்த்தியதை கண்டித்தும் அக்கட்சியின் செய்யூர் வட்டக்குழு சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகத்தின் முன் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சியின் 16ஆவது வார்டு வார்டு கிளைச் செயலர் பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். 
இதில் செய்யூர் வட்டச் செயலர் எஸ்.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் க.புருஷோத்தம்மன், பி.மாசிலாமணி, வட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணராஜ் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT