காஞ்சிபுரம்

குழந்தைத் திருமண தடுப்பு பிரசார ஊர்வலம்

DIN


சைல்டுலைன் 1098 நண்பர்கள் வாரத்தை முன்னிட்டு சைல்டுலைன் 1098, குழந்தைகள் உரிமைக்கான தோழமை
கூட்டமைப்பு மற்றும் ரூரல் ஸ்டார் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பாக மதுராந்தகம் அடுத்த ராமாபுரத்தில் குழந்தைகள் திருமணத் தடுப்பு ஊர்வலம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரப் பயணம் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், ராமாபுரத்தில் குழந்தைத் திருமணத் தடுப்பு பிரசார ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சிமன்ற செயலர் கே.எம்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைவேலு முன்னிலை வகித்தார். ரூரல் ஸ்டார் அறக்கட்டளை நிறுவனர் ஏ.டோமினிக் வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்ட சைல்டுலைன் 1098 பிரிவு இயக்குநர் தேவ அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்ட குழந்தைத் திருமணத் தடுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஊர்வலத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் திருமணத்தைத் தடுக்கும் நோக்கிலான பிரசாரத்தை செய்தபடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதில் , சைல்டுலைன் உறுப்பினர் ஆலிஸ், சிசிஆர்என் உறுப்பினர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT