காஞ்சிபுரம்

வனத் துறையைக் கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்

DIN


வனத் துறையினரைக் கண்டித்து கோழியாளம் கிராமத்தினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்து கோழியாளம் கிராமம் உள்ளது. அதன்படி, தீட்டாளம் முதல் கோழியாளம் கிராமம் வழியாக மதுராந்தகம் செல்வதற்கு குண்டும் குழியுமான சாலையில் பயணிக்க வேண்டியுள்ள. இச்சாலையைச் சீரமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. 
இந்நிலையில், இந்தச் சாலையின் குறுக்கே வனத்துறைக்கு சொந்தமான சுமார் 1 கி.மீ. சாலை உள்ளது. இப்பகுதியில் சாலை அமைக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைப் பணியினை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, 3 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. 
இதனால் அதிருப்தி அடைந்த கோழியாளம் கிராமத்தினர் பாப்பநல்லூர் - மதுராந்தகம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை கோழியாளம் பகுதியில் திங்கள்கிழமை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தரமேரூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலையைச் சீரமைப்பதாக போலீஸார் உறுதியளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT