காஞ்சிபுரம்

ஸ்ரீ நவகாளியம்மனுக்கு பாலாபிஷேகம்

DIN


மாமல்லபுரம், அண்ணாநகர் பகுதியில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீ நவகாளியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.  
நவகாளியம்மன் கோயிலில் ஆடி மாதம் கூழ்வார்த்தல் திருவிழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை ஜலம் திரட்டி,  கரக அலங்காரம் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை  பால் குட ஊர்வலம்  மற்றும் அம்மன் வீதியுலா, பாலாபிஷேகம் நடைபெற்றது.
 கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்,  நவகாளியம்மனுக்கு கும்பிடுதல் நிகழ்ச்சியும் மகா தீபாராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திங்கள்கிழமை விடையாற்றி உற்சவவத்தையொட்டி அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
 விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. திரளான  பக்தர்கள் விழாவில்  கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். . விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அண்ணாநகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT