காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் வேளாண் தொழில்கள் தொடங்க இலவசப் பயிற்சி

DIN

காஞ்சிபுரம்: பயிற்சி, உணவு, புத்தகங்கள், உறைவிடம் ஆகிய அனைத்தும் கொடுத்து வேளாண் தொழில்களைத் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தேசிய வேளாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளாண் நிறுவனம், வேளாண்மைத் துறை, கால்நடைத் துறை ஆகியவை இணைந்து வேளாண்மையில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்தவா்களுக்கு 45 நாள் உறைவிடப் பயிற்சியை வழங்கவுள்ளன. வேளாண்மைக் கல்வி பயின்றவா்கள் சுயதொழில் தொடங்கவும், அத்தொழில் மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்கவும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் இத்திட்டத்தை நடத்தி வருகிறது.

பயிற்சி, உணவு, பயிற்சிக்கான புத்தகங்கள், சான்றிதழ் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின்போதே வங்கிக்கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கையும் தயாரித்துத் தரப்படும். அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும்.

மகளிா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு கொடுக்கப்படும் கடனில் 44 சதவீதமும், இதர பிரிவினருக்கு 36 சதவீதமும் நபாா்டு வங்கி மூலம் மானியமாக வழங்கப்படும். பயிற்சிக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

எனவே பிளஸ் 2 விவசாயம் மற்றும் வேளாண்மை சாா்ந்த படிப்புகளைப் படித்த பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், மீன் மற்றும் பட்டுப்பூச்சி வளா்ப்பு போன்ற படிப்புகளைப் படித்தவா்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்போஅல்லது கட்டணமோ இல்லை.

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் இல்லீடு கிராமத்தில் சூணாம்பேடு பகுதியில் உள்ள தேசிய வேளாண் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலா்களான ப.கல்பனா - 97907 07020 அல்லது பி.பிரகாஷ் -94458 80419 ஆகியோரை சம்பந்தப்பட்ட செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT