காஞ்சிபுரம்

கல்வி நிறுவனத்துக்கு சமூகப் பொறுப்புணர்வு விருது

DIN


செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் கல்வி நிறுவனத்துக்கு சமூகப் பொறுப்புணர்வு விருது வழங்கப்பட்டதற்காக வியாழக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.  
செங்கல்பட்டு வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் கல்விகுழுமத்தின் கீழ் மகளிர் கலை-அறிவியல் கல்லூரி, மகளிர் கல்வியல் கல்லூரி மற்றும் குழந்தைகளுக்கான குளோபல் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன.
 இந்நிலையில், மும்பையில் உள்ள எஸ்.பி.ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வருடந்தோறும் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு நிறுவனங்களைத் தேர்வு செய்து விருதினை வழங்கி வருகிறது. 
 அந்த வகையில், இந்த வருடத்துக்கான சமூகப் பொறுப்புணர்வு நிறுவன விருதினை செங்கல்பட்டு வித்யாசாகர் கல்வு குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இக்குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா அண்மையில் பெற்றுக் கொண்டார். 
விருது பெற்றதற்காக நடைபெற்ற பாராட்டு விழாவில் தாளாளர் விகாஸ் சுரானாவை வித்யாசாகர் கல்விக்குழுமத்தின் நிர்வாகிகள் பி.ஜி.ஆச்சாரியா, சுரேஷ் கன்காரியா, ஹஸ்திமல் சுரானா உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT