காஞ்சிபுரம்

கல்லூரியில் இயந்திரவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

DIN


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பாக, தேசிய மாணவர் தொழில்நுட்ப கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சிக்கு தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். முதல்வர் வா.ராமசாமி, துணை முதல்வர் நாகராஜன், இயக்குநர் ஜெயஸ்ரீ, இயந்திரவியல் துறைத் தலைவர் கோபாலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் இரா.சதீஷ்பாபு வரவேற்றார். சென்னை விஷ்டியான் எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவன செயல்பாட்டு ஆய்வாளர் எம். கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு கருத்தரங்க மலர், குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டார். 
இக்கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்ற மாணவர்களுக்கு விநாடி -வினா, தொழில்நுட்பம் சாரா போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சென்னை சிம்மன்ஸ் சுமேசா நிறுவன துணைத் தலைவர் டி.பிராய் சந்திரகுமார் சான்றிதழ், பரிசுகள் ஆகியவற்றை வழங்கினார். பேராசிரியர் ந.செந்தில்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT