முகப்பு
காஞ்சிபுரம்

நிதி நிறுவன மோசடியைக் கண்டித்து மறியல்

அச்சிறுப்பாக்கத்தில் நிதி நிறுவன மோசடியை கண்டித்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:46 am IST
பகிர்:

அச்சிறுப்பாக்கத்தில் நிதி நிறுவன மோசடியை கண்டித்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தினர் அப்பகுதி மக்களிடம் மாதம் ரூ.500 வீதம் 60 மாதங்களுக்கு சீட்டுப் பணம் வசூலித்து வந்தனர்.  இதை நம்பிய கிராம மக்கள் முழுதொகையும் செலுத்தினர். ஆனால், சொன்னபடி நிறுவனத்தினர் ரூ.45 ஆயிரம் தராததுடன், கட்டிய பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.   அச்சிறுப்பாக்கம் போலீஸார்  பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தபின்னர் பொதுமக்கள் கலைந்துசென்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.