ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பெரும்பான்மை தொழிற்சங்கத்தை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, சிஐடியு சார்பில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில், பெரும்பான்மையான தொழிற்சங்கத்தைத் தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும், உற்பத்தியில் வேலைப்பறிப்பை ஏற்படுத்தும் ரோபோ பயன்பாட்டைக் கைவிடவேண்டும், மிகைப்பணி ஊதியத்தை சட்டப்படி இரட்டிப்பு ஊதியமாக வழங்க வேண்டும், சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஹூண்டாய் தொழிற்சாலை முன்பு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலத் தலைவர் அ.செளந்தரராஜன், மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.