காஞ்சிபுரம்

கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமி விழா

DIN


மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. மூலவர் ராகவேந்திரர் சந்நிதியிலும், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பீடாதிபதி ரகோத்தம சுவாமி மேளதாளம் முழங்க, ஊர்வலமாக  அழைத்து வரப்பட்டார். 
பின்னர் பிருந்தாவன வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த ராகவேந்திரர், ஆஞ்சநேயர், சத்யநாராயணர் சிலைகளுக்கு அவர் பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை நிர்வாகி ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT