காஞ்சிபுரம்

எல்லையம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

DIN


செங்கல்பட்டு அண்ணா நகர் எல்லையம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கரக ஊர்வலம் நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது.  இதையடுத்து கரகம் எல்லைப் புறப்பாடு நடைபெற்று பிற்பகல் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு ஆராதனை மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இரவு சிறப்பு அலங்காரத்தில் எல்லையம்மன் வீதியுலா நடைபெற்றது.  செங்கல்பட்டு, மேலமையூர், என்ஜிஜிஓ நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் அண்ணாநகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT