காஞ்சிபுரம்

குடிநீர்த் தட்டுப்பாடு: காஞ்சிபுரத்தில் சாலை மறியல்

DIN


பெருநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீராக மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 8-ஆவது வார்டு பகுதி காமாட்சியம்மன் சந்நிதி தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக பெருநகராட்சி முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, நகராட்சி, ஆட்சியர் அலுவலகங்களில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், இப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்டனர். இதனால், பழைய ரயில் நிலையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
நகராட்சி பொறுப்பு ஆணையரும் அங்கு வந்தார். இதையறிந்த, அப்பகுதியினர் அவரை முற்றுகையிட்டு குடிநீர் வழங்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன்பிறகு, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT