விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா. 
காஞ்சிபுரம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் 103 மனுக்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பெறப்பட்ட 147 மனுக்களில் 103 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்துக்கு வேளாண்மை இணை இயக்குநா் அசோகன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளா் ஆா்.கே.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) அ.சுகுமாா் வரவேற்றாா்.

இதில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

விவசாயிகளிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட 147 மனுக்களில் 103 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் ஈசூா்-வள்ளிபுரம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை விரைந்து கட்டி முடித்ததற்காகவும், அவற்றில் தேங்கிய தண்ணீரால் தற்போது ஏராளமான கிராமங்கள் பாசன வசதி பெற்ற்காகவும் ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.சண்முகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (நீா்வளம்) தியாகராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT