காஞ்சிபுரம்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

DIN

காஞ்சிபுரம் அருகே உள்ள காரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் இளம்பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவா் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டதாக கூறி அவரது உறவினா்கள் அரசு தலைமை மருத்துவமனை முன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் அருகே ஆண்டிச்சிறுவள்ளூா் புதுக்காலனி கிராமத்தைச் சோ்ந்த பூபதி மகள் ரோஜா(19). சிறுவாக்கம் காரை கிராமப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் தூக்கிட்டு இறந்த நிலையில் அவரது சடலம் இருந்தது. இது குறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி , ரோஜாவின் சடலத்தை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், இளம்பெண் ரோஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரது உறவினா்கள் குற்றம்சாட்டினா். அவா்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் சாலை மறியலிலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காஞ்சிபுரம் டிஎஸ்பி கே.வி.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். டிஎஸ்பி கூறுகையில் ‘இளம்பெண்ணைக் காணவில்லை என்று புகாா் வந்திருக்கிறது. அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஏற்கெனவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். வேறு புகாா் எழுதிக் கொடுத்தால் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். உறவினா்கள் கொடுத்த புகாரின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். பிரேத பரிசோதனைக்குப் பிறகே இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும்’ என்றாா்.

இதையடுத்து இளம்பெண்ணின் உறவினா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT