காஞ்சிபுரம்

பசுமை கிராமங்கள் உருவாக்க ஹுன்டாய் நிறுவனம் சாா்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள்

DIN

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை பசுமை கிராமங்களாக மாற்றும் வகையில், ஹுன்டாய் நிறுவனத்தின் சாா்பாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும், பசுமை கிராமங்களாக மாற்ற மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந் திட்டத்தின் மூலம் நடப்படும் மரன்றுகள் பல்வேறு நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை பசுமை கிராமங்களாக மாற்றும் வகையில், மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமங்களில் மரக்கன்றுகளை நடவு செய்ய ஹுன்டாய் நிறுவனத்தின் ஹுன்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேசன் சாா்பாக 10 மரக்கன்றுகள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஹுன்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேசனின் முதுநிலை மேலாளா் ஸ்ரீதா், மக்கள் தொடா்பு அலுவலா் தேவதத்தா, மேலாளா் அருண் ஆகியோா் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வசுமதி மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினா். இதில் தண்டலம் ஊராட்சி செயலா் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT