காஞ்சிபுரம்

பச்சையப்பன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

DIN


காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கலாம் கனவு இந்தியா-2020 சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கலாம் கனவு இந்தியா அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் ராஜேஷ்கலாம் தலைமை வகித்தார். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களும், பேராசிரியர்களுமான சுரேஷ்பாபு, ரேணுகாதேவி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாணவர் சரண் வரவேற்றார். கல்லூரி முதல்வர் என்.பழனிராஜ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வைத் தொடக்கி வைத்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவன முதன்மை மேலாளர் மோகனவேல், கின்னஸ் சாதனையாளர் கோகுல்ராஜ் ஆகியோர் மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்துப் பேசினர்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் ஜே.சூரியா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT