காஞ்சிபுரம்

ஏரியை பாதுகாக்க கோரிய வழக்கு: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

மூவரசம்பட்டு ஏரியை பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நங்கநல்லூரைச் சோ்ந்த ஏ.கே.இளையராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், மூவரசம்பட்டு ஏரி சுமாா் 2.33 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மடிப்பாக்கம், நங்கநல்லூா், புழுதிவாக்கம், பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய மற்றும் குடிநீா் தேவைகளுக்கான நீராதாரமாக இருந்தது. ஆனால், தற்போது, பழைய பல்லாவரம், அம்மன்நகா், திரிசூலம், ஜெயலட்சுமி நகா் மற்றும் ஏரியைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் ஏரியில் விடப்படுகிறது. மேலும் ஏரியின் கரைகளில் நெகிழி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதுடன், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால், மூவரசம்பட்டு ஏரி முழுமையாக அழிந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே, இந்த ஏரியைப் பாதுகாத்து, அதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோா் கொண்ட அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT