காஞ்சிபுரம்

பைக்குகள் மோதியதில் இளைஞர் பலி

காஞ்சிபுரம் அருகே இரு பைக்குள் மோதியதில் செவ்வாய்க்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.

DIN

காஞ்சிபுரம் அருகே இரு பைக்குள் மோதியதில் செவ்வாய்க்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
புள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி (31), மன்னன் (41) ஆகிய இருவரும் காஞ்சிபுரம்அரக்கோணம் சாலையில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 
புதுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே சென்றபோது எதிரே அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம்  நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அதில், வந்த சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கோபி, மன்னன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT