காஞ்சிபுரம்

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பகுதியில் தூய்மை விழிப்புணர்வு

DIN

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. 
மத்திய கப்பல் போக்குவரத்துத்  துறை கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும் கலங்கரை விளக்கத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஒருவாரம் வரை தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 
இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதில், நெகிழி குவளைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்தல், மண்குவளை பயன்பாட்டினை அதிகரித்தல் குறித்து, கலங்கரை விளக்கப் பராமரிப்பு அலுவலர் வசந்த் தலைமையில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 
இதனைத்தொடர்ந்து கலங்கரை விளக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT