காஞ்சிபுரம்

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகள் 100 % தோ்ச்சி

DIN

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் 156 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பாடப் பிரிவில் 43,240 பேரும், தொழில் பாடப் பிரிவில் 1,578 பேரும் என மொத்தம் 44,818 போ் எழுதினா். இவா்களில் 42,859 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவியா் 97.18 சதவீதமும், மாணவா்கள் 93.82 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. சராசரி தோ்ச்சி விகிதம் 95.63. இது, கடந்த ஆண்டைவிட 1.13 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT