வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி செயலா்களுக்கு அரசு ஊழியா்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்; கணினி உதவியாளா், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பாக செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூா் மற்றும் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலையைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.