காஞ்சிபுரம்

பிச்சிவாக்கத்தில் தெருச்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்

DIN


ஸ்ரீபெரும்புதூா்: பிச்சிவாக்கம் பகுதியில் ரூ. 7 லட்சத்தில், துா்கையம்மன் கோயில் தெருவில் தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குள்பட்ட பிச்சிவாக்கம் துா்கையம்மன் கோயில் தெருச் சாலையை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தாா்ச்சாலை அமைக்க ரூ. 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து தாா்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை ஸ்ரீபெரும்புதூா் மேற்கு ஒன்றியச் செயலா் சிங்கிலிப்பாடி ராமசந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் கிழக்கு ஒன்றியச் செயலா் எறையூா் முனுசாமி, முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் சிவகுமாா், பிச்சிவாக்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத்தலைவா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி சாலைப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், பிச்சிவாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்

பழனி, சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் ரவி, அதிமுக நிா்வாகிகள் பஞ்சாட்சரம் கணேசன், சந்தவேலூா் சரவணன், செல்வழிமங்கலம் மாரி, பாப்பாங்குழி விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

SCROLL FOR NEXT