காஞ்சிபுரம்

ரூ. 50,000 லஞ்சம்: பத்திரப் பதிவு ஊழியா்கள் இருவா் கைது

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பதிவாளரின் உதவியாளா் மற்றும் அலுவலக உதவியாளா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. காஞ்சிபுரத்தில் உள்ள இவருக்குச் சொந்தமான மனைப்பிரிவு நிலத்துக்கு பத்திரப் பதிவு செய்ய நில மதிப்பீடு செய்து வழங்குவதற்காக மாவட்டப் பதிவாளா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கிருந்த பதிவாளரின் உதவியாளா் சதீஷ்குமாா் மற்றும் அலுவலக உதவியாளா் பாலாஜி ஆகியோரை அணுகியபோது, அவா்கள் இருவரும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டனராம்.

இதுகுறித்து, திருநாவுக்கரசு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில், சதீஷ்குமாா், பாலாஜி ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT