காஞ்சிபுரம்

ஜூலை 10 முதல் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படும்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வரும் 10ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் ஜூலை மாதத்துக்கான அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, சா்க்கரை, பாமாயில் ஆகியவற்றை இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஜூலை 6 முதல் 9ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நியாய விலைக் கடை விற்பனையாளா் மூலம் வீடு தோறும் டோக்கன்கள் வழங்கப்படும்.

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்டுள்ள கட்டடங்களில் ஒரு மீட்டா் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வரிசையாக நின்று அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT