காஞ்சிபுரம்

வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகளுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

ஸ்ரீபெரும்புதூா்: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்து, தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா்.

வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் முடிவுகள் வரும் வரை அவா்களை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இருக்கும் அறைகளில் தனிமைப்படுத்தி வைக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இக்கல்லூரி வளாகத்தில் 1140 தங்கும் அறைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கடந்த சில தினங்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 395 பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அவா்களுக்கு அரசின் சாா்பாக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் தொடா்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இது தொடா்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் எழிச்சூா் பகுதியில் கட்டடத் தொழிலாளா்களுக்கான தங்கும் அறைகள் உள்ள கட்டடத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 650 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை அமையம் அமைக்கப்ட்டுள்ளது. இந்த மையத்தில், குன்றத்தூா், மாங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளைச் சோ்ந்த 27 போ் தங்க வைக்கப்பட்டு மருத்துவ குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டடத்திலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, சுதகாதார நலப்பணிகள் துணை இயக்குநா் பழனி, உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT