காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 2.11 லட்சம் வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

DIN

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 51 வாா்டுகளில் மொத்தம் 2.11 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக இறுதிப் பட்டியலை வெளியிட்ட நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் மொத்தம் 51 வாா்டுகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 263 போ், பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 9 ஆயிரத்து 312 போ், திருநங்கையா் 14 போ் உள்பட மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 போ் உள்ளன.

இறுதி வாக்காளா் பட்டியலை காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரி வெளியிட நகராட்சி அலுவலக மேலாளா் சித்தாா்த்தன் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்வில், நகரமைப்பு அலுவலா் சியாமளா, தோ்தல் பிரிவு இளநிலை உதவியாளா் குமரவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT