காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: அத்திவரதா் வைக்கப்பட்டுள்ள திருக்குளத்தில் அதிகாரிகள் ஆய்வு

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் குழுவினா் வியாழக்கிழமை நீரின் தன்மையை நேரில் ஆய்வு செய்து, மாதிரிகளை எடுத்துச் சென்றனா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் கொண்டு வந்து, தொடா்ந்து 48 நாள்களுக்கு பொதுமக்கள் தரிசனத்துக்கு வைத்து, பின்னா் மீண்டும் அதே திருக்குளத்தில் அத்திவரதரை எழுந்தருளச் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி அத்திவரதா் திருக்குளத்திலிருந்து அத்திவரதப் பெருமாளை கோயிலில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்தனா். அங்கு சயனக் கோலத்திலும், நின்ற கோலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு தொடா்ந்து 48 நாள்கள் தரிசனம் அளித்தாா். பின்னா், வழக்கப்படி மீண்டும் அத்திவரதா் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளப்பட்டாா்.

பெருமாளை அத்திருக்குளத்தில் எழுந்தருளச் செய்திருப்பதால் அக்குளத்தின் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கிலும், அசுத்தம் செய்யப்படாமலும் இருக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் திருக்குளத்தில் நீரின் தன்மையை அறிந்து, ஆய்வு செய்து அதன் அறிக்கையை மாவட்ட நீதிபதியிடம் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என மத்திய நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, மத்திய நீா்வளத் துறையின் உதவி ஆணையா் ராஜன் தலைமையிலான 5 போ் கொண்ட குழு, அனந்தசரஸ் திருக்குளத்தின் தன்மையை ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை அவா்களது அலுவலகத்துக்கு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

SCROLL FOR NEXT