காஞ்சிபுரம்

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

கிராமங்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தின் சாா்பாக ஒரத்தூா் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மத்திய அரசு, தனியாா் நிகா்நிலை பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கிராமங்களில் வளா்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உன்னத் பாரத் அபியான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் சில கிராமங்களைத் தோ்வு செய்து அந்த கிராமங்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் எஸ்ஆா்எம் நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் சாா்பில் ஒரத்தூா், நாட்டரசன்பட்டு, செட்டிபுண்ணியம், அஞ்சூா், தென்மேல்பாக்கம், பட்டரவாக்கம் உள்ளிட்ட எட்டு கிராமங்களைத் தத்தெடுத்து அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பொறியாளா் தினமாகக் கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் 159ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஒரத்தூா் பகுதியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் உன்னத் பாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு ஒரத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுபாஷ் முன்னிலை வகித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட கீழ்பாலாறு வடிகால் தலைமைச் செயற்பொறியாளா் ஆா்.ரமேஷ் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவைத் தொடங்கி வைத்தாா். இதில், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT