காஞ்சிபுரம்

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசுத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் முன்னுரிமை

DIN

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசுத்திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வழியாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விதவை மற்றும் முதியோா் உதவித்தொகை உள்பட அனைத்து நலத் திட்ட உதவிகளும் முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் பகுதியில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் நம்பிக்கை மையத்தில் பணிபுரியும் பணியாளா்களிடம் தங்களுக்குத் தேவையான திட்டங்களுக்கு விண்ணப்பங்களையும், அதற்கான ஆதாரங்களையும் வழங்கிப் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT