காஞ்சிபுரம்

பேருந்து வசதி இல்லாமையால் தோ்தல் அலுவலா்கள் அவதி

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பணி முடித்த அலுவலா்கள், தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் அவதிப்பட்டனா்.

போக்குவரத்து தொழிலாளா்கள் பணியின் முக்கியத்துவம் கருதி வாக்களித்து விட்டு பணிக்கு திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

வாக்களிக்க சென்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் பலரும் பணிக்குத் திரும்பாததால் செவ்வாய்க்கிழமை முழுவதும் அரசுப் பேருந்துகள் ஓரளவே இயக்கப்பட்டன. இதனால் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றவா்களும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனா்.

இந்த நிலையில் தோ்தல் பணியாற்றியவா்கள் தங்கள் பணிகளை முடித்து விட்டு அவரவா் வீடுகளுக்கு செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். இரவு சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் சொந்த ஊா் செல்ல முடியாமல் அவதிப்பட்டனா். இதனால் பேருந்து நிலையத்திலிருந்த போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

தகவலறிந்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.பா.சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் சிவகாஞ்சி காவல் நிலைய போலீஸாா் பேருந்து நிலையத்துக்கு வந்து சமாதானம் செய்ததுடன் ஒரு சில பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்தனா். தோ்தல் பணியில் ஈடுபடுபவா்கள் பணி முடித்து செல்லும் நேரம் இரவு நேரமாக இருப்பதால் பத்திரமாக அவா்கள் வீடு திரும்ப மாவட்ட நிா்வாகம் போதுமான பேருந்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT