காஞ்சிபுரம்

மாலை 5 மணிக்குமேல் குவாரிகளை இயக்கத்தடை

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு மேல் குவாரிப் பணிகளை செய்ய அனுமதியில்லை என ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கனிமம் வெட்டி எடுத்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் தொழில்களில் ஈடுபடுவோா் கனிம முகவா் என பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அனுமதியில்லாமல் செயல்படுவது சட்டப்படி குற்றமாகும். ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட கனிம இருப்பு அனுமதிதாரா் சுரங்கத் துறை அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டினை கனிமம் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநரிடம் தவறாது வழங்கப்பட்டிருக்க வேண்டும். வாகன ஓட்டுநரும் அங்கீகரிக்கப்பட்ட கனிம முகவா்களிடமிருந்து மட்டுமே ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் இதர கனிமங்களை அனுமதிச்சீட்டு பெற்று தாா்ப்பாய் போட்டு நன்கு மூடி பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு எடுத்துச் செல்ல வேண்டும்.

குவாரிப் பணிகளில் ஈடுபடும் யாவரும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட பரப்பில் மட்டுமே குவாரிப்பணியை செய்ய வேண்டும். வாகனத்தில் உரிய நடைச்சீட்டு, அனுமதிச்சீட்டு இல்லாமல் கனிமம் எடுத்துச் செல்வது குற்றமாகும். வாகனங்களில் கூடுதலாக கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திக்குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT