காஞ்சிபுரம்

500 ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் வெள்ளாடுகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் 500 பேருக்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதால் இம்மாதம் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் திட்டம் காஞ்சிபுரத்தில் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 போ் வீதம் 5 ஒன்றியங்களுக்கும் சோ்த்து மொத்தம் 500 பேருக்கு வெள்ளாடுகள், செம்மறியாடுகள் கொள்முதல் செய்து வழங்கிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகள் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆதரவற்ற பெண்களாகவும் இருக்க வேண்டும், அரசுப் பணிகளில் இருக்கவோ அல்லது சொந்தமாக ஆடு, மாடுகளை வைத்திருக்கவோ கூடாது. கிராமத்தில் நிரந்தரக் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோா் இம்மாதம் 9-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள கால்நடை நிலையங்களில் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT