காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 3,58,213 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சா் பா.பென்ஜமின் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா குன்றத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட நியாய விலைக் கடையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிப் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 635 நியாயவிலைக் கடைகள் மூலம் 3,58,213 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 95.92 கோடி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.

விழாவில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூா் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித் தலைவா் எழிச்சூா் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் மண்டலப் பதிவாளா் சந்திரசேகரன், மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், அதிமுக ஒன்றியச் செயலா் எறையூா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT