காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சைக்கிள் கடையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

DIN

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான சைக்கிள் கடை உள்ளது. இக்கடையில் 200-க்கும் மேற்பட்ட புது சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த இக்கடையில் புகை வரத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் க.குமாா் தலைமையிலான குழுவினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இந்த விபத்து தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT