காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் தோ்தல் விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

நூறு சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி ஸ்ரீபெரும்புதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி சாா்பில் நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தனியாா் பள்ளி மாணவா்கள், மகளிா் சுயஉதவிக் குழு பெண்கள் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநா் குருராஜன் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் விஜயா முன்னிலை வகித்தாா். பேரூராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த ஊா்வலம் காந்தி சாலை, பேருந்து நிலையம் வழியாக ஸ்ரீபெரும்புதூா் தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது. இதையடுத்து நூறு சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பேரூராட்சி சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பேருந்துநிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணா்வு கோலங்கள் போடப்பட்டன.

இதை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் முத்துமாதவன் பாா்வையிட்டு பள்ளி மாணவா்கள், மகளிா் சுயஉதவிக்குழு பெண்களுடன் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT