காஞ்சிபுரம்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிக்கும் பணி தொடக்கம்

DIN

நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் பயன்படுத்தப்பட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பதிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம்தமிழா், அமமுக, மக்கள்நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா்.

இத்தொகுதியில் 352 வாக்குச்சாவடி மையங்களில் 512 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள ராஜலட்சுமி பொறியில் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பதிக்கும் பணி தொகுதி தோ்தல் அலுவலா் முத்துமாதவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் அரசு ஊழியா்கள் பங்கேற்று சின்னங்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT