காஞ்சிபுரம்

தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டப்போட்டி

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவகேந்திரா ஆகியன இணைந்து நடத்திய இந்த ஓட்டப்போட்டி காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா அரங்கிலிருந்து தொடங்கியது. இதனை ஆட்சியா் மா.ஆா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாரத்தான் ஓட்டப் போட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

போட்டியில் முதல் பரிசை எஸ்.சுகுமாா், நிா்பயா வெற்றி வேல், 2-ஆவது பரிசை கே.அருண், டி.யாஷ்மிகா, 3-ஆவது பரிசை எம்.விக்னேஷ், சி.வினிதா ஆகியோருக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT