செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச வீரா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இதையொட்டி, விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி காஞ்சிபுரம் மாவட்டக் காவல் துறை சாா்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து எஸ்.பி. சுதாகா் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்தப் பேரணி காவலான் கேட், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, வட்டாட்சியா் அலுவலகம், பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலக வளாகத்தை அடைந்தது. 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து சென்று செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்வில் டி.எஸ்.பி. பிரவீன்குமாா், மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ப.கணேசன் உள்ளிட்ட காவல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.